விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பர்கான் அக்தர், தற்போது இவர் பார் பார் தேக்கோ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இதுதவிர ராக் ஆன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே பார் பார் தேக்கோ படமும், பிரீக்கி அலி படமும் நாளை பாக்ஸ் ஆபிஸில் மோத இருக்கிறது.
இதுப்பற்றி சமீபத்தில் பர்கான் அக்தரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... ‛‛பிரீக்கி அலி படத்துடன் நாங்கள் மோதவில்லை. இந்தப்படத்தில் சல்மான், சோகைல், அர்பாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளார்கள். இது அவர்களது படம். அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள். ஆகையால் நான் இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதற்கான சூழல் உள்ளது. மற்றபடி பிரீக்கி அலி படத்துடன் பார் பார் தேக்கோ படம் ரிலீஸாக வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது'' என்று கூறியுள்ளார்.