மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் 10 இடத்துக்குள் இருக்கிறார். தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அவரை பற்றி ராணுவ தேர்வு ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கட்டுப்பாடு மிக்க தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது விமானப்படையின் பொது நுழைவுத் தேர்வு (காமன் அட்மிஷன் டெஸ்ட்). கடந்த ஆகஸ்ட் 28ந் தேதி நடந்த இந்த தேர்வில் தீபிகா படுகோனே பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. "தீபிகா படுகோனே 2016ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றது எந்த படத்திற்காக?" என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மல்டிபிள் சாய்ஸ் கேள்வி என்பதால் பாஜிராவ் மஸ்தானி, தமாஷா, பிகு, ஹேப்பி நியூ இயர் ஆகிய படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சரியான பதில் எது என்று கேட்கப்பட்டுள்ளது.
ராணுவ தேர்வில் தீபிகாவின் பெயர் இடம்பெற்றதை ஒரு புறம் பாலிவுட் கொண்டாடினாலும், ராணுவ வீரர்களுக்கு சினிமா நடிகைகள் பற்றிய தகவல் மிகவும் முக்கியமா? என்ற விமர்சனமும் எழாமல் இல்லை.