மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
2013ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான காதல் திரைப்படம் 'ஆஷிக்-2'. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க மோஹித் சூரி இயக்கினார். இந்தப்படம் எல்லா மொழி ரசிகர்களின் ரசனையையும் ஈர்த்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.
இந்நிலையில் தற்போது ஆஷிக்-3 படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதில் சித்தார்த் மல்கோத்ரா, ஆலியா படம் இருவரும் நடிக்க இருப்பதாக செய்தி வந்தது. பின்னர் அந்த செய்தியை மறுத்தார் சித்தார்த். இந்நிலையில் இப்போது சித்தார்த் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சித்தார்த் மல்கோத்ரா கூறியிருப்பாதவது... ‛‛நான், ஆலியா இருவரும் ஆஷிக்-3ல் நடிக்கிறோம். நாங்கள் இருவரும் நடிப்பது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். இந்தப்படத்திற்காக நான் கிட்டார் கற்றுக் கொண்டு வருகிறேன்'' என்றார்.
சித்தார்த் நடிப்பில் தற்போது பார் பார் தேக்கோ படம் உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீஸாகிறது.