மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பஜ்ரங்கி பைஜான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் கபீர்கான் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு டியூப்லைட் என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்தில் சல்மான் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார். கடந்த ஓராண்டாக எந்த படத்திலும் கமிட்டாகமல் இருந்த தீபிகா இப்போது இந்தாண்டின் முதல்படமாக சல்மான் படத்தை தேர்வு செய்துள்ளார். இப்படத்தின் கதை 1960-ம் ஆண்டை பின்னணியாக கொண்டு உருவாக இருக்கிறது. மேலும் இப்படத்தில் சல்மான் உடன் இன்னொரு ஹீரோவும் நடிக்க இருக்கிறார். தற்போது அந்த ரோலுக்கான நடிகர் தேடும் படலம் நடந்து வருகிறது. ஜூலை இறுதியிலோ அல்லது ஆகஸ்ட்டிலோ 'டியூப்லைட்' படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.