மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீபகாலமாக ஒருவரின் வாழ்க்கை வரலாறு, சினிமாவாக தொடர்வது பாலிவுட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. மில்காசிங், மேரிமோம், தோனி, அசாரூதின், நீர்ஜா ஆகியோரை தொடர்ந்து இப்போது, இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையும் படமாக இருக்கிறது. இதில் ராணி லட்சுமிபாயாக, தேசிய விருது நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். கேத்தன் மேத்தா இயக்குகிறார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது.
இப்படத்திற்காக கங்கனா, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். குறிப்பாக வாள் சண்டை, குதிரையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு ராணி லட்சுமிபாய் கேரக்டர் என்பதால் கங்கனாவின் தோற்றமும் மாற இருக்கிறது. இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான லுக்கில் கங்கனா வர இருக்கிறார். இதற்கான பிரத்யேகமான காஸ்ட்யூம் டிசைனர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். விரைவில் ராணி லட்சுமிபாய் லுக்கில் தோன்ற இருக்கிறார் கங்கனா.