மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அமீர்கான், தன் பிகே படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, 'டங்கல்' எனும் படத்தில், மல்யுத்த வீரராக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஹரியானாவில் நடந்தது. இதையடுத்து டங்கல் டீம் டில்லியில் சென்றுள்ளனர். இங்கு ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவின் மல்யுத்த வீரர் சுஷில் குமாரை, அமீர்கான் சந்தித்துள்ளார். அப்போது எந்தமாதிரியாக உடலை பராமரிப்பது, எப்படி உடற்பயிற்சி மேற்கொள்வது, எப்படி மல்யுத்தத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல விஷயங்களை சுஷில் குமாரிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். மேலும் அமீர்கானுக்கு சில டிப்ஸ்களையும் சுஷில் வழங்கியுள்ளார்.
டங்கல் படம், மல்யுத்த வீரர் மகாவீர் போகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ளது.