மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அஜய் தேவ்கன், தற்போது 'ஷிவ்வாய்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அஜய், ''பாத்ஷாகோ'' என்ற பெயரில் நடிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு(2017) ஜன.26ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்துவிட்டது. இந்நிலையில், இப்படத்தில் அஜய் ஜோடியாக கரீனா கபூரை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படம் தொடர்பாக இயக்குநர் மிலன் லூதிரா, கரீனாவை சந்தித்து, 'பாத்ஷாகோ' படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும், அஜய்யும் நீங்கள் நடிக்க வேண்டும் என விரும்புகிறார் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. கரீனா இன்னும் முடிவு சொல்லவில்லையாம்.
இதனிடையே இப்படத்தில், லிசா ஹெய்டன் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரில் ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் படத்தின் கதைக்கு இவர்கள் பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என்பதால் பின்னர் அந்த முடிவை கைவிட்டார் இயக்குநர் மிலன்.