'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான் நடிப்பில் வெளியான டான் படத்தின் ஒன்று, இரண்டு பாகங்களை தொடர்ந்து டான்-3ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் ஃபர்கான் அக்தர்.
இரண்டு பாகங்களிலும் நடித்த பிரியங்கா சோப்ராவிற்கு பதிலாக மூன்றாவது பாகத்தில் கத்ரினா கைஃப்பை நடிக்க வைக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.
இது உண்மையாகும் பட்சத்தில், கத்ரினா கைஃப் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'பார் பார் தேகோ', 'ஜக்கா ஜசூஸ்' ஆகிய படங்களின் சூட்டிங்கை முடித்தவுடன் டான்-3ம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மூன்று வருடங்களுக்கு முன்பு யாஷ் சோப்ரா இயக்கத்தில் வெளியான 'ஜப் டக் ஹை ஜான்' திரைப்படத்தில், ஷாரூக்கான், கத்ரினா ஜோடி இணைந்து நடித்து பெரும் வெற்றியை ஈட்டித் தந்தனர்.
இந்த ஜோடி மீண்டும் இணையுமானால், டான்-3ம் பாகத்திற்கான எதிர்ப்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எகிறத்தான் செய்யும். விரைவில் டான்-3ம் பாகத்தின் செய்திகள் படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும். அப்போது, தான் படத்தில் பிரியங்கா சோப்ராவா அல்ல கத்ரினாவா இல்லை வேறு யாராவதா என்பது தெரியவரும்!