மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரஜினி-கனகா நடித்த அதிசயப்பிறவி படத்தில் அறிமுகமானவர் கிங்காங். அப்படத்தில் கிங்காங் குருவாகவும், ரஜினி சிஷ்யனாகவும் நடித்திருந்தனர். அதன்பிறகு தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிக்கத்தொடங்கிய கிங்காங், வடிவேலு நடித்த படங்களிலும் அதிகமாக இடம்பெற்றார். அதோடு, ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக்கான் - தீபிகா படுகோனே நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து இந்தி படத்திலும் நடித்த பெருமையை பெற்றார் கிங்காங்.
இந்தநிலையில், அதே ரோஹித் ஷெட்டி அடுத்து தமிழில் வெளியான சூதுகவ்வும் படத்தை இந்தியில் இயக்குகிறார். அப்படத்தில் கிங்காங்கும் ஒரு வேடத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்களாக மீடியாக்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த செய்தியை கிங்காங்கும் படித்துள்ளார். ஆனால் இந்த செய்தியை அவர் வெளியிடவில்லையாம்.
இதுபற்றி கிங்காங் கூறுகையில், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் எனக்கு நடிக்க சான்ஸ் கொடுத்தார் ரோஹித் ஷெட்டி. அதன்பிறகு சிங்கம் ரிட்டன்ஸ் என்ற படத்தை இயக்கிய அவர் தற்போது ஷாருக்கான்- கஜோல் நடிக்கும் தில்வாலே என்ற படத்தை இயக்கி வருகிறார். டிசம்பரில் இப்படம் திரைக்கு வருவதாக சொல்கிறார்கள். அதன்பிறகு அவர் சூதுகவ்வும் என்ற தமிழ் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் நான் ஒரு வேடத்தில் நடிப்பதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை அந்த படம் சம்பந்தமாக யாரும் என்னை அணுகவில்லை. எனது நண்பர்களே மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறீர்களாமே? என்று போன் போட்டு கேட்கிறார்கள். ஆனால் இப்படியொரு செய்தியை யார் பரப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை என்று சொல்லும் கிங்காங், இந்த வதந்தி உண்மையானால் ரொம்ப சந்தேசமே என்றும் கூறுகிறார்.