'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
தமிழில் தோனி படத்தின் மூலம் அறிமுகமான மராட்டிய நடிகை ராதிகா ஆப்தே. அதன் பிறகு வெற்றிச் செல்வன் என்ற படத்தில் நடித்தார். தற்போது மராட்டிய மற்றும் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அடிப்படையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டான ராதிகா ஆப்தே நடிப்பில் பல புரட்சிகளை செய்தவர். அண்மையில் ஒரு ஆங்கில குறும்படத்திற்காக துணிச்சலுடன் நிர்வாணமாக நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த ஹீரோயின் ராதிகா ஆப்தேதான்.
இந்த நிலையில் ராதிகா ஆப்தே நடித்துள்ள அகல்யா என்ற குறும்படம் யூ டியூப்பில் வெளியாகி பட்டைய கிளப்புகிறது. கஹானி படத்தை இயக்கிய கஜாய்கோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காணாமல் போன இளைஞர் ஒருவரைத் தேடி ஒரு போலீஸ் அதிகாரி, ராதிகா ஆப்தேவின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு செம அழகான ராதிகா ஆப்தேவ் தனது 70வது வயது கணவருடன் வசிக்கிறார். காணாமல் போன இளைஞன் கடைசியாக அந்த வீட்டுக்குத்தான் வந்திருக்கிறார்.
70 வயது முதியவருடன் இளம் பெண் ராதிகா ஆப்தே எப்படி குடும்பம் நடத்துகிறார் என்ற சந்தேகத்துடன் வருகிறார் போலீஸ் அதிகாரி. வந்த இடத்தில் ராதிகாவின் சிக்னல் அந்த போலீஸ் அதிகாரிக்கு கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பை விட வேண்டாம் என்று அவரும் நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் 14 நிமிட குறும்படத்தின் திகில் திருப்பம். அமிதாப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் படத்தை பாராட்டி தள்ளிவிட்டார்கள்.