ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆனந்த் எல் ராய் இயக்கத்திலான அடுத்த படத்தில், ஷாரூக் கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனந்த் எல் ராய் இயக்கத்திலான அடுத்த படத்தில், ஹீரோ கேரக்டர் குள்ளமான உருவம் கொண்டதாக உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அந்த கேரக்டரில், சல்மான் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது, அந்த கேரக்டரில், ஷாரூக் கான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாரூக் கானிற்கு, இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால், அந்த குள்ள கேரக்டரில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்த ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.