விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சல்மான் நடித்துள்ள பஜ்ரங்கி பகிஜான் படத்தின் ஷூட்டிங் முடிந்து இம்மாதம் ஜூலை 17ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் சல்மான் கான். இந்நிலையில் இந்தப்படத்திற்கு பிறகு பிரேம் ரத்தன் தன் பயோ படத்தில் நடிக்கும் சல்மான் அடுத்தப்படியாக சுல்தான் எனும் படத்தில் நடிக்கிறார். இப்படம் பற்றி சல்மான் கூறுகையில், பஜ்ரங்கி பகிஜான் படத்திற்கு பிறகு நவம்பர் மாதம் முதல் பிரேம் ரத்தன் தன் பயோ படத்தில் நடிக்கிறேன். அடுத்து சுல்தான் படம். இப்படத்தில் நான் பாக்ஸராக நடிக்கிறேன். மேலும் சில தற்காப்பு கலைகளையும் நான் கற்க உள்ளேன். சுல்தான் படத்தில் நடிப்பதற்கு முன்பாக இரண்டு மாதங்கள் அந்தப்படத்தின் கேரக்டருக்காக நான் பயிற்சி எடுக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.