விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தபோதிலும், தேவ் ஆனந்துடன் இணைந்து நடிக்காததை, பெரிய இழப்பாகவே கருதுவதாக மூத்த நடிகர் தர்மேந்திரா கூறியுள்ளார்.
பாலிவுட் திரையுலகின் திறமையான மூத்த நடிகரான தர்மேந்திரா, சிறிது இடைவெளிக்கு பிறகு, செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தின் மூலம் மீண்டும வெள்ளித்திரைக்குள் மிளிர்ந்துள்ளார். இந்த படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து, அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.....
செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தில் உங்களது கேரக்டர் குறித்து...
செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தி்ல், எனது கேரக்டர் நகைச்சுவை உணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்தால் தான், எனது கேரக்டர் எவ்வகையில் வந்துள்ளது என்பதை அறிய முடியும். என் கேரகடர் படம்பார்ப்பவர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இந்த படத்தில் நடிக்க ஏன் ஒத்துக்கொண்டீர்கள்?
செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தின் டைரக்டர் ஸ்மீப் காங் உடன் முன்னதாக பஞ்சாபி படம் ஒன்றில் நடித்துள்ளேன். 2014ம் ஆண்டில், ஸ்மீப் காங் இயக்கத்தில், டபுள் டி டிரபிள் படத்தில் நடித்துள்ளேன். ஸ்மீப் காங் திறமையான இயக்குநர் மற்றும் சிறந்த மனிதர். நான் அவர் படத்தில் பணியாற்றியபோது, ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தை நேரில் உணர்ந்தேன். அவர் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகவது குறித்து கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன். அப்போது அவர் என்னை அணுகி, செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தின் கதையை கூறினார். கதை மிகவும் பிடித்திருந்ததால், உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டேன்.
யமலா பகலா தீவானா 2 படத்தின் தோல்வி குறித்து...
யமலா பகலா தீவானா 2 படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் அதில் இடம்பெற்ற நம்பமுடியாத கேரக்டர்கள் தான். படத்தின் சுவாரஸ்யம் அதிகரிக்கும் என்பதற்காக, நடைமுறைக்கு சாத்தியமில்லாத தன்மைகளை கொண்ட கேரக்டர்களை, இயக்குநர் உருவாக்கிவிட்டார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தீர்களே? தற்போது நலமடைந்து விட்டீர்களா?
பட சூட்டிங்கில் இருந்தபோது, வேனிட்டி வேனில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துவிட்டேன். சிறு காயத்துடன் தப்பிவிட்டேன். இதனிடையே சமீபத்தில், எனது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு திடீரென்று குறைந்தது. எனது ரசிகர்களின் அதீத அன்பினால், அதிலிருந்தும் பூரண குணம் பெற்றேன். தற்போது, ரசிகர்களின் அன்பாலும் மற்றும் கடவுளின் கிருபையாலும் நலமாக உள்ளேன்.
பாலிவுட் திரையுலகின் ஹீமேன் ஆக உள்ளீர்கள். உங்கள் உடலழகின் ரகசியம் என்ன?
நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனது தந்தையுடன் இணைந்து விவசாய நிலங்கள் மற்றும் பண்ணைகளில் பணிபுரிந்துள்ளேன். கடின உழைப்பின் மூலமாகவே, நான் இந்தளவிற்கு முன்னேறியுள்ளேன். அதோடு மட்டுமல்லாது, கபடி கிரிக்கெட் உள்ளிட்ட அவுட்டோர் விளையாட்டு போட்டிகளில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளது. கடின உழைப்பே, எனது உடலழகின் ரகசியம்.
தற்போதைய படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் குறித்து....
தற்போது வரும் படங்களில், சண்டைக்காட்சிகள் எல்லாம் செயற்கைத்தனமாக இருக்கின்றது எனது கருத்து. புதிய உபகரணங்களின் மூலம் எடுக்கப்படும் சண்டைக்காட்சிகளில், இயற்கைத்தன்மையை தேடவேண்டியுள்ளது. படம் பார்ப்பவர்களுக்கும், இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
டினா அகுஜாவுடன் நடித்தது குறித்து..
நடிகர் கோவிந்தா மகள் டினா அகுஜாவுடன் இணைந்து நடித்தது புதுவித அனுபவமாக இருந்தது. கோவிந்தா குடும்பத்தினருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. டினா அகுஜா, எனது மகள் போன்றவர். மிகவும் எளிமையானவர்.
தாத்தாவாக பதவியுயர்வு பெற்றுள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எனது பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதை என் வாழ்வின் பெரும்பாக்கியமாக கருதுகிறேன். தற்போது தான் நான் என்வாழ்வின் அமைதியான தருணத்தையை உணர்கிறேன்.
எதை மிஸ் செய்ததாக உணர்கிறீர்கள்?