'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
சன்னிலியோனுக்கு பாலிவுட்டில் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சமீபத்தில்தான் ஆபாச வீடியோக்களில் நடித்திருக்கும் சன்னி லியோன், இந்திய படங்களிலும் ஆபாசமாக நடித்து கலாச்சார சீர்கேடு செய்கிறார் என்று இந்து அமைப்பு ஒன்று அவருக்கு எதிராக கொடி பிடித்தது. அவர்கள் கொடுத்த புகாரை அடுத்து சன்னியை அழைத்து மும்பை க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தற்போது இந்தியில் துஷ்கார் கபூருடன் இணைந்து சன்னிலியோன் நடித்துள்ள மஸ்தி ஜாதே என்ற படத்திற்கு சென்சார்போர்டு அதிகாரிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, படத்தைப்பார்த்த அதிகாரிகள், ஓரிரு காட்சிகளில் ஆபாசம் என்றால் கத்தரிக்கலாம். ஆனால் மொத்த படமே ஆபாசமாக இருப்பதால் இந்த படத்தை சென்சார் செய்ய முடியாது என்று ஏற்க மறுத்து விட்டார்களாம்.
அதன்பிறகு மேல்முறையீட்டுக்குழுவுக்கு படத்தை அனுப்பியபோது, அவர்களும் அதே பதிலைத்தான் சொன்னார்களாம். இதனால் சன்னிலியோனை வைத்து படமெடுத்த மஸ்தி ஜாதே பட நிறுவனம் கடும் அதிர்ச்சியில் உள்ளதாம். மேலும், ஏற்கனவே தன்னை நாடு கடத்த சொல்லி இந்து அமைப்பு கொடி பிடித்து வருவது ஒரு பக்கமிருக்க, இப்போது தான் நடித்த படத்தை சென்சார் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டதால் கடும் மூடுஅவுட்டில் இருக்கிறாராம் சன்னிலியோன்.