பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் |
உலக அழகி ஐஸ்வர்யா ராய், சில ஆண்டு இடைவௌிக்கு பிறகு மீண்டும் நடிக்கும் படம் ஜஸ்பா. ஐஸ்வர்யா ராய் ரிட்டர்ன்ஸால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜஸ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வௌியிட்டு இருந்தனர். அதில் சிட்டி பின்னணயில் ஐஸ்வர்யா ராய் எதையோ தொலைத்து விட்டு படபட என இருப்பது மாதிரியான போஸ்டர்கள் வௌியாகின. இப்போது படத்தின் இன்னொரு போஸ்டர் வௌியிடப்பட்டுள்ளது. அதில் இர்பான் கான் தோன்றியிருக்கிறார். கதைப்படி வக்கீலான ஐஸ்வர்யா, தொலைந்து போன தனது குழந்தையை தேடுவது மாதிரியான கதையாம். இதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி இர்பான் அவருக்கு உதவுவது போன்று கதை உருவாகியுள்ளது. கொரியன் படமான 7 டேஸ் படத்தை அடிப்படையாக கொண்ட இப்படம் தயாராகி வருகிறது.