மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் இயக்குநர் ரோகித் ஷெட்டியின் படம் என்றால் அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாகவும் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாகவும் இருக்கும். சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு அடுத்தப்படியாக மீண்டும் ஷாரூக்கான் உடன் தில்வாலே என்ற படத்தில் இணைந்துள்ளார் ரோகித். இப்படத்தில் ஷாரூக்கான் உடன் கஜோல், வருண் தவான், கீர்த்தி சனோன் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
இதனிடையே இப்படத்தில் ஒரு அதிரடியான சண்டை காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் ரோகித். அதுவும் தண்ணீருக்கு அடியில் நடக்கும் ஒரு புதுமையான பிரமாண்ட சண்டைகாட்சியை எடுக்க உள்ளார். இந்த சண்டை காட்சியை மொரிசீயஸில் படமாக்க இருக்கிறார். தில்வாலே படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடக்கிறது. இங்கு படப்பிடிப்பை முடித்து மொரீசியஸ் செல்ல உள்ளனர். ஷாரூக்கானும் தனது ராயீஸ் படத்தை முடித்துவிட்டு மொரீசியஸ் செல்ல உள்ளார்.