மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள எக்ஸ் எக்ஸ் எக்ஸ் மற்றும் க்யா கூல் ஹைய் ஹம் 3 படத்தின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கென் கோஷ் இயக்கத்தில், செக்ஸை மையமாகக்கொண்டு, ஐந்து கதைகளின் தொகுப்பாக உருவாகியுள்ள எக்ஸ் எக்ஸ் எக்ஸ் படம், ஜூலை மாதம் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிக்க ஷாகித் கபூர் அணுகப்பட்டதாக வந்த தகவலுக்கு, இயக்குநர் கென் கோஷ் மற்றும் ஷாகித் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உமேஷ் காக்டே இயக்கத்தில், அடல்ட் செக்ஸ் காமெடி படமாக உருவாகியுள்ள க்யா கூல் ஹைய் ஹம் 3 படம், செப்டம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யா கூல் ஹைய் ஹம் மற்றும் கயா சூப்பர் கூல் ஹைய் ஹம் படத்தின் அடுத்த பாகமே, க்யா கூல் ஹைய் ஹம் 3 என்பது குறிப்பிடத்தக்கது.