மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் பிரபல இயக்குநரான விஷால் பரத்வாஜ், சிறந்த இயக்குநர் மட்டுமல்ல சிறந்த இசையமைப்பாளரும் கூட. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த ஹைடர் படம் ஐந்து தேசிய விருதுகளை பெற்றது. இதில் இவர் இசையமைத்த ஒரு பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ரீ-மேக்காகி இப்போது இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. அக்ஷ்ய் குமார், ஸ்ரேயா, தபு ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஷால் பரத்வாஜ் இசையமைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்டோர் கேட்டு கொண்டனர். அதன்படி இப்போது அவரும் இசையமைக்க இருக்கிறார். இதனை தயாரிப்பாளர் குமார் மங்காத் உறுதி செய்துள்ளார். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் என்றும், அதில் ஒரு பாடலுக்கு விஷால் பரத்வாஜ் இசையமைக்க இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். த்ரிஷ்யம், ஜூலை 31ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.