தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசன் நடிகையாவதற்கு முன்பு பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். அதனால் அவ்வப்போது படங்களில் பாட்டும் பாடி வருகிறார். சமீபத்தில் கூட தீவர் படத்திலும், தன் தங்கை அக்ஷ்ரா நடித்த ஷமிதாப் படத்திலும் ஒரு பாட்டு பாடியிருந்தார் ஸ்ருதி. இந்த இரண்டு பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தான் நடித்து வரும் மெயின் கபார் படத்திலும் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் ஸ்ருதி. சமீபத்தில் இந்தப்பாடல் படமாக்கப்பட்டது.
மெயின் கபார் படம் தமிழில் முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்த ரமணா படத்தின் ரீ-மேக் ஆகும். இப்படத்தில் அக்ஷ்ய் குமாரும், ஸ்ருதிஹாசனும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கூடவே சோனு சூட், கோவிந்தா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கிரிஷ் இயக்க, சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.