மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கோல்கட்டா : ஷமிதாப் படத்தை பிரபலப்படுத்தும் பொருட்டு, நாளை இரவு 8 - 9 மணிக்குள், நடிகர் அமிதாப் பச்சன், 93.5 ரெட் எப்.எம்.மில் ரேடியோ ஜாக்கியாக, நேயர்களிடம் பேச உள்ளார்.
இளையராஜா இசையமைப்பில், பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ஷமிதாப் படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது.
ஷமிதாப் படத்தை, மக்களிடையே பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளில், படக்குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில், படக்குழு, நேரடியாக ரசிகர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும், படக்குழு, புரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தியது.
ஷமிதாப் படத்தை மேலும் பிரபலப்படுத்தும் வகையில், 93.5 ரெட் எப்.எம். சார்பில், ஆல் இந்தியா ஷமிதாப் ரேடியோ என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி, நாளை இரவு 8 மணிமுதல் 9 மணி வரை ஒலிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ரேடியோ ஜாக்கியாக, நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க உள்ளதுடன், ரசிகர்களுடன் கலந்துரையாடவும் உள்ளார்.