மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டுவிட்டர் மொபைல் வீடியோ அப்ளிகேசன் மூலம், தனது ரசிகர்களுடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், நேரடியாக கலந்துரையாட உள்ளார். சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள டுவிட்டர், டுவிட்டர் மொபைல் வீடியோ என்ற அப்ளிகேசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்ளிகேசனின் உதவியுடன், படம்பிடிப்பதோடு மட்டுமல்லாது, 30 செகண்ட் கால அளவு கொண்டதாக எடிட் செய்து, 140 கேரக்டர்கள் கொண்ட தகவலுடன் மற்றவர்களுடன், அந்த வீடியோவை பகிர்ந்து கொள்ளலாம். சமூக வலைத்தளங்களில், பெருமளவு ஈடுபாடு கொண்டு அதை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் ஷாரூக் கான். ஷாரூக், தனது மொபைலில், இந்த அப்ளிகேசனை பயன்படுத்த துவங்கி உள்ளார். இந்த அப்ளிகேசனை பயன்படுத்தும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஷாரூக், இதன்மூலம் பெற்றுள்ளார். இந்த அப்ளிகேசனின் உதவியுடன், ரசிகர்களுடன் கலந்துரையாட உள்ளதாக ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.