மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் பச்சன், முதன்முறையாக முழு ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளார். ஜஜ்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, சஞ்சய் குப்தா இயக்குகிறார். இதுகுறித்து, இயக்குனர் சஞ்சய் குப்தா டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சூட்டிங் நாள் நெருங்க, நெருங்க, மனதில் புது உத்வேகம் பிறக்கிறது. ஜஜ்பா படம், ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ள முழு ஆக்சன் படம் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். 19 ஆண்டுகளுக்கு பிறகு, ஐஸ்வர்யா ராய், அனுபம் கேர் உடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.