தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
பாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் தேவன் வர்மா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. 1937-ம் ஆண்டு புனேயில் பிறந்தவர் தேவன் வர்மா. சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தார். ஆரம்பத்தில் காமெடி படங்களில் நடித்து புகழ்பெற்றார். 1960லிருந்து 1980 ஆண்டுகள் வரையில் வந்த படங்களில் இவரது நகைச்சுவை ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. நடிகராக மட்டுமல்லாது 4 படங்களை இயக்கியும், 5 படங்களை தயாரித்தும் உள்ளார். கடைசியாக இவர் 2003ம் ஆண்டு கல்கட்டா மெயில் என்ற படத்தில் நடித்திருந்தார்.
புனேயில் தனது மனைவி ரூபா கங்குலி மற்றும் இளைய மகளுடன் தங்கியிருந்த தேவன் வர்மாவுக்கு ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு இருந்த நிலையில் அதிகாலை மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.