மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைப் அலிகான், அடுத்தடுத்து கைநிறைய படங்களுடன் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சைப் அலிகான் நடித்துள்ள, ஹேப்பி எண்டிங் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அந்தப்படம் எப்போது ரிலீஸாகும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக இன்னும் பல படங்களில் வரிசையாக கமிட்டாகியுள்ளார் சைப்.
இதுகுறித்து சைப் அலிகான் கூறுகையில், ஒரு தயாரிப்பாளராக நானும், தினேஷ் விஜயனும் இணைந்து கோ கோவா கோன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளோம். இதற்கு அடுத்தப்படியாக சாகேட் சவுத்ரியின் படத்தில் நடிக்கவுள்ளேன். அவர் தற்போது படத்திற்கான திரைக்கதை அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சுஜாய் கோஸ் இயக்கத்தில், சஸ்பெக்ட் எக்ஸ் படத்தின் ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறேன். இதுதொடர்பாக பேசி வருகிறோம் என்று கூறியுள்ளார்.