மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, போமன் இரானி, சோனு சூட் ஆகியோரது நடிப்பில் அக்டோபர் 24ம் தேதி வெளியான படம் ஹேப்பி நியூ இயர். ஷாரூக்கானே தயாரித்திருந்த இப்படம் உலகம் முழுக்க சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இப்படம் வெளியான முதல்நாளே ரூ.44.97 கோடி வசூல் செய்துள்ளது.
இதுகுறித்து ரெட் சில்லிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இதுவரை எந்த ஒரு படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு ஹேப்பி நியூ இயர் படத்திற்கு கிடைத்திருக்கிறது. இப்படம் முதல்நாளில் மட்டும் ரூ.44.97 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில் மட்டும் ரூ.42.62 கோடியும், தெலுங்கில் ரூ.1.43 கோடியும், தமிழில் 0.92 கோடியும் வசூலாகியுள்ளது ரெட் சில்லிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியப் படங்களில் ஒரேநாளில் இவ்வளவு தொகை வசூலான படம் ஹேப்பி நியூ இயர் தான் என்றும், இதுதான் மிகப் பெரிய சாதனை என்றும் கூறுகிறார்கள்.