ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
''சிங்கம் ரிட்டர்ன்ஸ்'' படத்தின் வெற்றிக்கு பிறகு அஜய் தேவ்கான் நடித்து வரும் படம் ஆக்ஷ்ன் ஜாக்சன். பிரபுதேவா இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கான் உடன் சோனாக்ஷி மற்றும் யாமி கவுதம் நடிக்கின்றனர். இப்படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி என்று கூறுகிறார் அஜய் தேவ்கான். சமீபத்தில் நடந்த ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அஜய், ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தில் நடனத்தில் புதுவிதமான ஸ்டலை பயன்படுத்தி இருக்கிறார் பிரபுதேவா. இதுஎனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. முதன்முறையாக ரிகர்சல் பார்த்து இப்படத்தில் நடித்தேன், நடனம் ஆடினேன். நடனஅமைப்பாளராக இருந்து, பின்னர் நடிகராகவும், இப்போது இயக்குநராகவும் உயர்ந்துள்ளார். அவருக்கு ஒரு நடிகரின் ப்ளஸ் பாயின்ட் என்ன என்று தெரியும், அதைவைத்து அந்த நடிகரிடமிருந்து எதை கொண்டு வரமுடியுமோ அதை கொண்டு வந்துவிடுவார். ஆக்ஷ்ன் ஜாக்சனில் முடிந்தளவுக்கு எனது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறேன், இனி ரசிகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும், ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தில் நான் நடித்தது மகிழ்ச்சி என்று கூறினார்.