மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல இயக்குநர் பிஜாய் நம்பியார், நடிகர்கள் அமிதாப் பச்சன், பர்கான் அக்தரை வைத்து இயக்கி வரும் படம் டூ. இப்படத்தின் ஷூட்டிங் டில்லியில் நடந்து வருகிறது. இதில் பர்கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அமிதாப் பச்சன், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட செஸ் வீரராக நடித்துள்ளார். நடிப்பில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல, அதனால் இருவரும் போட்டி போட்டு நடித்து வருகின்றனர். அதிலும் பர்கான் அக்தர், அமிதாப்பிற்கு ஈடுகொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் ஸ்டில் வெளியாகியுள்ளது. அதில், வீல்சேரில் அமிதாப்பும், அவருக்கு எதிரே பர்கானும் அமர்ந்து செஸ் விளையாடுவது போன்று படங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அமிதாப், பர்கான் உடன் அதிதி ராவ்வும் முக்கிய ரோலில் நடிக்கிறார். வித்யு வினோத் சோப்ரா தயாரித்து வருகிறார்.