ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
மறைந்த பாப் சிங்கர் மைக்கேல் ஜாக்சனுக்கு, பாலிவுட் நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், டைகர் ஷெரப் உள்ளிட்ட பலர் அவருக்கு நடனங்கள் மூலம் ஏற்கனவே மரியாதை செய்துள்ளனர். இந்நிலையில் இப்போது நடன அமைப்பாளரும், இயக்குநருமான பரா கானும், மைக்கேல் ஜாக்சனுக்கு பாடல் மூலம் மரியாதை செய்துள்ளார். அவர் இயக்கியுள்ள, ''ஹேப்பி நியூ இயர்'' படத்தில் இடம்பெற்றுள்ள ''நான்சென்ஸ் கி நைட்...'' என்ற பாடலில் சில நடன அசைவுகள் மைக்கேல் ஜாக்சனின் நடனம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாடலில் ஷாரூக்கான், போபன் இரானி, அபிஷேக், தீபிகா படுகோனே, சோனு சூட் உள்ளிட்ட பலர் நடனமாடியுள்ளனர்.
இதுகுறித்து பராகான் தன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, ஹேப்பி நியூ இயர் படத்தின் நான்சென்ஸ் கி நைட் பாடலை என் குருவான மைக்கேல் ஜாக்சனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்தப்பாட்டின் பாடல் வரிகளையும் பராகான் தான் எழுதியுள்ளார்.
ஹேப்பி நியூ இயர் படம், தீபாவளி விருந்தாக அக்டோபர் 24ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.