Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

குத்துப்பாட்டு நடிகைகளாக மாறும் பாலிவுட் ஹீரோயின்கள்...!

09 அக், 2014 - 12:08 IST
எழுத்தின் அளவு:

முன்பெல்லாம் சினிமாவில் குத்துப்பாட்டுக்கு ஆடுவதற்கு என்றே சில கவர்ச்சி நடிகைகள் இருந்து வந்தார்கள். இப்போதும் அதுபோன்று சில நடிகைகள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு போதிய மவுசு தான் இல்லை. காரணம், சமீபகாலமாக முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களே குத்துப்பாட்டுக்கு ஆட ஆரம்பித்துவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் ஒரே ஒரு பாட்டில் கோடிகளில் சம்பளம் பெற்று விடலாம் என்ற எண்ணம் தான். 20 நாட்கள், 30 நாட்கள் என்று கால்ஷீட் கொடுத்து, நடித்து வாங்கும் சம்பளத்தை காட்டிலும் ஓரிருநாளில் ஒரு பாட்டில் ஆடி அந்த சம்பளத்தை பெற்றுவிடுகின்றனர். இந்தி திரையுலகில் ஆரம்பித்த இந்த கலாச்சாரம் இப்போது பரவலாக அனைத்து சினிபீல்டிலும் பரவ தொடங்கியிருக்கிறது. இருந்தாலும் பாலிவுட் ஹீரோயின்கள் தான் டாப்பில் இருக்கின்றனர். அவர்கள் யார் யார்.? என்பதை பற்றி இனி பார்ப்போம்....


கரீனா கபூர்


பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலரும் ஜோடி போட்டு நடித்தவர் கரீனா கபூர். நடிகை சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இப்போதும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவரும் குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார். குறிப்பாக தபாங்-2வில் இவர் ஆடிய சிப்கலே சயான் பெவிகால் செ..., ரா-ஒன்-ல் தும் மெரி சமக் செலோ..., ஹீரோயின்-ல் ஏ கல்கத் ஜவானி போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.


கத்ரீனா கைப்


பார்பி டால் என்று அழைக்கப்படும் பாலிவுட்டின் செக்ஸி நடிகை கத்ரீனா கைப்பும், நிறைய குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார். தீஸ் மார் கான் படத்தில் அவர் ஆடிய ஷீலா கி ஜவானி பாடல் மற்றும் அக்னீபத் படத்தில் அவர் ஆடிய சிக்கனி சாமெலி... பாடல்கள் ரொம்ப பிரபலம்.


தீபிகா படுகோனே


பாலிவுட்டின் ஹாட்டஸ்ட் நடிகைகளில் தீபிகா படுகோனேவும் ஒருவர். முன்னணி நடிகையாக இருக்கும் இவரும் ஏராளமான குத்துப்பாடல்களுக்கு ஆடியிருக்கிறார். 2011ம் ஆண்டு வெளிவந்த தம் மாரோ தம் படத்தில் இவர் ஆடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இந்தப்பாட்டில் தீபிகாவின் கவர்ச்சியான உடையும், அவர் உடம்பில் குத்தியிருந்த டாட்டூவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


ப்ரியங்கா சோப்ரா


மேரி கோம் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், ஏராளமான குத்துப்பாடல்களில் ஆடியிருக்கிறார். ''ராம் லீலா'' படத்தில் இவர் ஆடிய 'ராம் ஜாகி லீலா...' பாடல், ஜாஞ்சீர் படத்தில் இவர் ஆடிய பிங்கி ஹாய் பைசா... போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.


வித்யாபாலன்


பாலிவுட்டின் பன்முக தன்மை கொண்ட திறமையான நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபித்த வித்யாபாலனுக்கும் குத்துப்பாட்டின் மீதிருந்த மோகம் தீரவில்லை, அதனாலும் அவரும் குத்துப்பாட்டில் ஆட ஆரம்பித்துவிட்டார். பெராரி கி சவாரி படத்தில் அவர் ஆடிய மாலா ஜவு தே... என்ற குத்துப்பாடல் ரசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


பிபாஷா பாசு


பாலிவுட்டின் ஹாட் நடிகையான பிப்ஸ் எனும் பிபாஷா பாசுவும் ஓம்காரா, ஜோடி பிரேக்கர்ஸ் உள்ளிட்ட படங்களில், குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார். இவர் ஆடிய நமாக் இஷ்க் மற்றும் பிட்டி ஜல்அயிலே... பாடல்கள் மிகப்பிரபலம். இந்த இரண்டுபாடல்களிலும் மிகவும் கவர்ச்சியாக ஆடி ரசிகர்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்தவர்.


சித்ரங்கடா சிங்


பாலிவுட்டின் தற்போதைய நடிகைகளில் பன்முக திறமை கொண்ட இளம் நடிகை சித்ரங்கடா சிங். இவரும் ஏராளமான குத்துப்பாடல்களில் ஆடியிருக்கிறார். இருந்தாலும் ஜோக்கர் படத்தில் இவர் ஆடிய குத்துப்பாட்டுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in