'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
ஹைடர் படத்திற்காக நடிகர் ஷாகித் கபூர், மொட்டையடித்து பாதி முடி வளர்ந்த நிலையிலும், தாடியுடனும் தனது தோற்றத்தை மாற்றினார். இப்போது அவரைப்போன்று நடிகர் விவேக் ஓபராயும் தனது புதிய படத்திற்காக தோற்றத்தை மாற்ற இருக்கிறார். விவேக், முதன்முறையாக யாஷ்ராஜ் பிலிம் தயாரிக்கும், பேங் சோர் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விவேக் ஓபுராய் சிபிஐ., ஆபிசராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தனது தோற்றத்தை மாற்ற இருக்கிறார் விவேக்.
கடந்தவாரம் யாஷ்ராஜ் ஸ்டுடியோவுக்கு சென்ற விவேக், அங்கு தனது ரோலுக்கான லுக் எப்படிப்பட்டது உள்ளிட்ட பல விஷயங்களை கேட்டறிந்து அதன்படி தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். குறிப்பாக தான் வைத்திருந்த நீளமான முடியை கட் செய்துவிட்டார். இதனிடையே விவேக் ஓபுராய்க்கு படக்குழு சில கண்டிசன்களை போட்டுள்ளதாம், அதாவது படத்தை பற்றியோ தனது கேரக்டர் பற்றியே வெளியே சொல்லக்கூடாது என்றும், அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாம். மேலும் படக்குழுவினருக்கும் படம் பற்றி வெளியே எதுவும் சொல்லக்கூடாது என்று கண்டிஷன் போடப்பட்டுள்ளதாம்.