'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
அதித்யா மற்றும் பரணீதி நடித்துள்ள தாவாத்-இ-இஷ்க் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து தற்போது ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில், இப்படத்தை புரொமோட் செய்ய உணவு யாத்திரையை தொடங்கியுள்ளனர் தாவாத்-இ-இஷ்க் படக்குழுவினர். உணவு யாத்திரையின் மூன்றாம் நாளில் பதேப்பூர் சிக்ரியின் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் சுத்த சைவ சாப்பாடுகளை படக்குழுவினர் ரசித்து ருசித்தனர். பிறகு ஆதித்யா, ப்ரணீதி இருவரும் அங்குள்ள தர்காக்களுக்கு எல்லாம் சென்றனர். பின்பு ஆக்ரா வந்தவர்களுக்கு முழுக்க முழுக்க அன்றைய இரவு ஒரே கொண்டாட்டமாக அமைந்தது. இரவு பொழுதில் தாஜ்மஹாலின் பின்னணியில் ஆதித்யா, ப்ரணீதி, இயக்குநர் சாஜித் வாஜித், சபரி பிரதர்ஸ், உள்ளிட்ட பலர் பாட்டு, கச்சேரி என ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பல வகையான உணவுகளையும் உண்டு ரசித்தனர்.