‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் அமீர்கானும் குறிப்பிடத்தக்கவர். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதை விட தரமான கதைகள், தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். அப்படிப்பட்ட அமீர்கான் பிகே என்ற படத்திற்காக நிர்வாணமாக நடித்த போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
அதையடுத்து அந்த காட்சி கதைக்கு அவசியமானது. படத்தை பார்க்கும்போது அப்படியொரு காட்சி தேவைதான் என்று ரசிகர்களே சொல்வார்கள் என்று அவர் சொன்னார். ஆனபோதும், அமீர்கான் ஆபாச நடிகை சன்னி லியோன் லிஸ்டில் சேர்ந்து விட்டார் என்று மும்பை மீடியாக்களும், விமர்சகர்களும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பிகே படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்ற அமீர்கான், அங்குள்ள மீடியாக்களை சந்தித்தாராம். அப்போது அவர் நடித்த எந்த படத்தை பற்றியும் கேள்விகள் கேட்காத மீடியாக்கள், டி.வியில் அவர் நடத்திய சத்யமேவ் ஜெயதேவ் நிகழ்ச்சியை பற்றியே அதிகமாக கேட்டார்களாம். அதிலிருந்து சமீபகாலமாக தான் நடித்து வரும் படங்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்பதை புரிந்து கொண்டாராம், அமீர்கான்.
அதையடுத்து அவர் விடுத்துள்ள செய்தியில், ரசிகர்களுக்கு என் படங்கள் மீதான ஆர்வம் குறைந்து விட்டதாக கருதுகிறேன்.அதனால் நடிப்புக்கு நான் முழுக்குப்போடும் காலம் நெருங்கி விட்டதை என்னால் உணர முடிகிறது என்று கூறியுள்ளார். அமீர்கானின் இந்த முடிவு பாலிவுட் சினிமா மட்டுமின்றி, அவரது ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.