மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
1989-ம் ஆண்டு சுபாஷ் கே இயக்கத்தில், அனில் கபூர், ஜாக்கி ஷெரப், மாதுரி தீட்சீத், டிம்பிள் கபாடியா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ராம் லகான். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படத்தை இப்போது ரீ-மேக் செய்ய இருக்கின்றனர். சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம், சிங்கம் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களை இயக்கிய ரோகித் ஷெட்டி தான் இயக்க உள்ளார். பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
இதனிடையே, 'ராம் லகான்' படம் 2016ம் ஆண்டு வெளியாகும் என்று கரண் ஜோகர் தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளதோடு, அதற்கான முதல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.