மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமன்னா இந்தியில் அறிமுகமான முதல் படமான 'ஹிம்மத்வாலா' படு தோல்வியடைந்த ஒரு படம். ஆனால், அந்த தோல்வி பற்றிக் கவலைப்படவில்லை என்கிறார் தமன்னா. “80-களில் வந்த ரீமேக்காக 'ஹிம்மத்வாலா' படத்தைக் கொடுத்ததுதான் தோல்விக்குக் காரணம். அந்த படத்தின் தோல்வியால் நான் கவலைப்படவில்லை. ஒவ்வொரு நடிகரும் வெற்றி, தோல்வி ஆகியவற்றைக் கடந்துதான் வருவார்கள். நான் பல வெற்றிகளையும் பார்த்திருக்கிறேன், தோல்விகளையும் பார்த்திருக்கிறேன்,” என்றார்.
'ஹிம்மத்வாலா' படத்தை இயக்கிய சஜித்கான் இயக்கத்தில் தமன்னா மீண்டும் நடித்துள்ள 'ஹம்சகல்ஸ்' படம் இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ளது. இதனிடையே இருவரும் நெருக்கமாகப் பழகுகிறார்கள் என்று வந்த செய்தியையும் மறுக்கிறார் தமன்னா. “அவர் எனது சகோதரர் போன்றவர். மற்றவர்களை விட அவர் எனக்கு எந்த விதத்திலும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவருடன் மீண்டும் பணிபுரிவதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை. ஒவ்வொரு படைப்பாளிக்குமே வெற்றி,தோல்வி என்பது வரும் போகும். அவருடைய இரண்டு படங்களுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை,” என்றார்.
'ஹம்சகல்ஸ்' படத்தின் மூலும் எப்படியாவது வெற்றி பெற்று, தமிழ், தெலுங்கைப் போல இந்தியிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் தமன்னா இருக்கிறாராம். அதனால் இந்த படத்திலும் தாராளமாகவே நடித்திருக்கிறார் என்கிறார்கள். படத்தில் நடிப்பதற்கு அவர் கொடுத்து சிறந்த ஒத்துழைப்பின் காரணமாகவே படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட மற்ற நடிகைகளை விட தமன்னாவுக்கு இயக்குனர் சஜித் கான் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்கிறார்கள்.