ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
கன்னட இயக்குனர் ஹேமந்த் ஹெக்டே டைரக்ட் செய்து நடித்திருக்கும் படம் நிம்பேஹுலி. நிவேதிதா, கோமல்ஜா, மதுரிமா ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு கர்நாடக மாநில தி-.மு.க தடைகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தப் படத்தில் கர்நாடக காமெடி நடிகர் புல்லட் பிரகாஷ் அரசியல்வாதியாக நடித்துள்ளார். அதில் அவர் தி.மு.கழக தலைவர் கருணாநிதியை இமிடேட் செய்து நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது மகள் கேரக்டர் ஒன்றும் படத்தில் வருகிறது. அது கனிமொழியை குறிப்பதாக கூறுகிறார்கள். புல்லட் பிரகாசின் கேரக்டர் பெயரும் கருணா ரங்கா என்று இருக்கிறது. இது எங்கள் தலைவர் கருணாநிதியை அவமானப்படுத்தும் படம். என்று தி-.மு.கவினர் கோர்ட்டுக்கு போயிருக்கிறார்கள். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் படத்துக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது. இதனால் கிறிஸ்துமசுக்கு ரிலீசாக வேண்டிய படம் தள்ளிப்போயிருக்கிறது.