மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர்கள் சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறி நடிப்பது தற்போது ஒரு பேஷனாகி விட்டது. பாலிவுட்டில் தொடங்கிய இந்த கல்ச்சர் தற்போது கோலிவுட் வரைக்கும் பரவிக்கிடக்கிறது. ஆனால், ஆரம்பத்தில் இதில் அதிக ஆர்வம் காட்டிய சில நடிகர்கள், இதற்காக மாதக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கிறது என்பதோடு, முக அழகும் கெட்டுப்போகிறது என்பதால் இப்போது சிக்ஸ்பேக்கில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலையில், பாலிவுட்டின் செக்ஸி கதாநாயகியான கரீனாகபூர், ஒரு படத்துக்காக தனது உடம்பை சிக்ஸ்பேக்குக்கு மாற்றுகிறாராம். ஆண்கள் மட்டுமே இதற்கான பயிற்சிகளை செய்து வரும் நிலையில் கரீனா எடுத்துள்ள இந்த முடிவு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம். சில நடிகைகள்கூட இதனால் உடல் அழகு கெட்டுப்போகும் என்று கரீனாவுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.
ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத அவர், நான் நடிக்கிற சுத்தி படத்துக்கு அந்த உடல்கட்டு தேவையாக இருக்கிறது. அதனால் கதைக்காக என்னை மாற்றிக்கொள்ளப்போகிறேன். மேலும், நடிகர்கள் செய்யக்கூடியதை நடிகைகளாலும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கப்போகிறேன் என்றும் தில்லாக பதில் கொடுத்துள்ள கரீனாகபூர், சிக்ஸ்பேக் பயிற்சியோடு, சில தற்காப்பு கலைகளையும் சேர்த்து பயிற்சி எடுக்கப்போகிறாராம்.