விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஷாரூக் கானின் ராசியான ஹீரோயின்கள் பட்டியலில், தீபிகா படுகோனேவும் இடம் பிடித்து விட்டார். "ஓம் சாந்தி ஓம் படத்தில், ஷாரூக் கான் ஜோடியாகத் தான், அறிமுகமானார், தீபிகா. அந்த படத்தின் வெற்றி, தீபிகாவை, பாலிவுட்டில் முன்னணி வரிசைக்கு கொண்டு சென்று விட்டது. இதைத் தொடர்ந்து, பல ஹிட் படங்களில் நடித்த தீபிகா, தற்போது, "சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்திலும், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதில், தீபிகாவின் நடிப்பு திறமையை பார்த்து வியந்தாராம், ஷாரூக். மேலும், தங்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதால், தன்னுடைய அடுத்த படமான, "ஹேப்பி நியூ இயர் என்ற படத்திலும், தீபிகாவையே புக் செய்யும்படி இயக்குனர் பாரா கானிடம் கூறி விட்டாராம். இதனால், மகிழ்ச்சியில் ரெக்கை கட்டி பறக்கிறார், தீபிகா.