தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் |

பாலிவுட்டின் பிரபல நடிகர் கஜராஜ் ராவ். எந்தவித வேடம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்பவர். தற்போது ‛துபைய்யா' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். சோனம் நாயர் இயக்க, ஸ்பார்ஸ் ஸ்ரீவஸ்தாவா, ரேணுகா ஷானே, புவன் அரோரா(அமரன் படத்தில் சிப்பாய் விக்ரம் சிங்காக நடித்தவர்) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மார்ச் 7ல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதுதொடர்பாக கஜராஜ் ராவ் அளித்த பேட்டி...
துபைய்யா வாய்ப்பு எப்படி வந்தது?
சோனம் நாயரின் மசாபா மசாபா சீசன் 2வில் சிறப்பு ரோலில் நடித்தேன். அந்தசமயம் அவரது வேலை எனக்கு பிடித்தது. அப்போதே அவரிடம் உங்களது அடுத்த படத்தில் ரோல் எதுவும் இருந்தால் என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். ஒருநாள் இந்த படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து துபைய்யா பட வாய்ப்பு வந்தது. சோனம் நாயர் இயக்குகிறார், இதில் நடிக்கிறீர்களா என கேட்டார். கதையை படித்து பார்த்தேன், பிடித்தது, நடித்தேன்.
டூ வீலர் சம்பந்தமான கதை... உங்கள் வாழ்க்கையில் இதுதொடர்பாக நடந்த சம்பவம் எதுவும் உண்டா?
ஆரம்ப காலத்தில் நான் டில்லியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தேன். அந்தநேரத்தில் எனக்கு ஒரு நண்பர் இருந்தார், நாங்கள் இருவரும் எப்போதும் அவரது பைக்கில் தான் படப்பிடிப்புக்கு செல்வோம். ஒரு நாள் நான் பைக் ஓட்டுகிறேன் என்றேன். அப்போது நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, திடீரென இரண்டு லாரிகளுக்கு இடையே எனது பைக் வந்தது. லாரிகளுக்கு இடையில் இருந்து பைக்கை வெளியே எடுக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் முடியவில்லை. பயத்தில் எனது கைகள் நடுங்கின. இரண்டு லாரிகளின் ஓட்டுநர்களும் என்னை திட்டினார்கள். அப்போது முதல் நான் பைக் ஓட்டுவதும் இல்லை, பைக்கும் வாங்கவில்லை.
படம் அல்லது சீரிஸ் அதில் நடிக்கும்போது இது பார்வையாளர்களை கவரும் என உணர்ந்தது உண்டா... அவர்களின் நம்பிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை கொள்வது நன்றாகத்தான் இருக்கிறது. அதேநேரம் பொறுப்பும் அதிகரிக்கிறது. இன்றைக்கு விமான நிலையம், வணிக வளாகம், உணவகம் என எல்லா இடங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னை அடையாளம் கண்டு போட்டோ எடுக்கிறார்கள். இது மகிழ்ச்சியாக உள்ளது. மக்களின் அன்பை பார்க்கையில் இந்த அன்பு தொடர நான் இன்னும் என் வேலையை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.