பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி ரகசிய திருமணம் | பாண்டிராஜ் இயக்கும் படத்தை சத்தமில்லாமல் நடித்து முடித்த விஜய் சேதுபதி! | பிளாஷ்பேக் : 4 பெயர்களில் நடித்த இளவரசி | பிளாஷ்பேக் : இயக்குனரை காதலித்து திருமணம் செய்த லட்சுமியின் தாயார் | விராட் கோலியைப் பாராட்டிய பாகிஸ்தான் நடிகை | ஆமீர்கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன் | கன்னடம், ஆங்கிலத்தில் படமாகும் 'டாக்சிக்' | மதுரை படப்பிடிப்பை முடித்த 'பராசக்தி' குழு | ஜீ தமிழ் டிவிக்கு மாறிய மணிமேகலை | 2025ல் மீனாவின் முதல் 'கெட் டு கெதர்' |
முன்னணி பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நர்கீஸ் சினிமாவில் நடிக்க விரும்பி இந்தியாவில் குடியேறினார். 'மெட்ராஸ் கபே', 'ராக் ஸ்டார்', 'ஹவுஸ்புல் 3' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரசாந்த் நடிப்பில் வெளியான 'சாகசம்' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார்.
இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபர் டோனி என்பவரை கடந்த சில வருடங்களாக அவர் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. டோனி காஷ்மீரை சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்பு நர்கீஸ் பக்ரி அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையில் புதிதாக ஒருவர் வந்திருப்பதாகவும், தற்போது அதிக மகிழ்ச்சியுடன் காணப்படுவதாகவும் சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் நர்கீஸ், டோனி திருமணம் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் மிக நெருக்கமான உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.