நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
மலையாளத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணியில் வெளியான 'திரிஷ்யம்' மற்றும் அதன் இரண்டாம் பாகமான 'திரிஷ்யம் 2' என இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அது மட்டுமல்ல திரிஷ்யம் முதல் பாகம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தி, சைனீஸ் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதன் இரண்டாம் பாகம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதில் ஹிந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடித்தவர் அஜய் தேவகன். முதல் பாகத்தை மறைந்த இயக்குனர் நிஷிகாந்த் காமத் இயக்கியிருந்தார். இரண்டாம் பாகத்தை அபிஷேக் பதக் இயக்கினார். மற்ற மொழிகளைப் போல் ஹிந்தியில் திரிஷ்யம் முதல் பாகம் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து மூன்றாம் பாகத்திற்காக அஜய் தேவகன் மட்டுமல்ல ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் சமீபத்தில் மோகன்லால் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அனேகமாக படம் இந்த வருடமே தயாராகி வெளியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோலத்தான் ஹிந்தியிலும் அஜய் தேவ்கன் இந்த மூன்றாம் பாகத்தின் மீது தற்போது கவனத்தை திருப்பி உள்ளார். அதே சமயம் இந்த திரிஷ்யம் 3 ஹிந்தியில் தயாராவது பற்றி இன்னும் சில குழப்பங்கள் நிலவி வருகின்றன.
அதற்கு காரணம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே 'திரிஷ்யம் 3' பற்றிய பேச்சு வந்தபோது இந்த முறை மலையாளத்தில் தயாராகும் அதே நேரத்தில் ஹிந்தியிலும் இந்த படத்தை ஒரே நேரத்தில் எடுக்க வேண்டும் என திரிஷ்யம் 3 பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக இந்த படத்தின் கதையை ஜீத்து ஜோசப் தயார் செய்ததுமே அதை வாங்கி அப்படியே ஹிந்தியில் எடுக்க துவங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தனர். அஜய் தேவ்கனும் இந்த வருடமே திரிஷ்யம் 3யை ரிலீஸ் செய்வதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளாராம்.
ஆனால் இதற்கு முன்பாக மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிறகே திரிஷ்யம் பட ரீமேக் உரிமைகள் மற்ற மொழிகளுக்கு கொடுக்கப்பட்டு அதன் பின் படங்கள் வெளியாகின. இப்போது ஹிந்தியில் எடுக்கப்படும் திரிஷ்யம் ரீமேக் மலையாளத்தை போல அப்படியே இருக்காது என்றும் திரிஷ்யம் 2 வில் செய்தது போல ஹிந்திக்காக சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ஒரு தகவல் சொல்லப்பட்டு வருகிறது. அப்படி என்றால் இவர்களாகவே திரிஷ்யம் மூன்றாம் பாகத்திற்காக புதிய கதையை உருவாக்க இருக்கிறார்களா என்றும் இன்னும் தெளிவான அறிவிப்பு வரவில்லை. விரைவில் இந்த குழப்பங்களுக்கு விடை சொல்லும் விதமாக இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.