நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் |

நடிகர் மோகன்லாலின் 'பரோஸ்' திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அவரே முதல் முறையாக இயக்கியிருந்த இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற தவறியது. அவரது அடுத்த படமான தொடரும் திரைப்படம் வரும் ஜனவரி 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் மோகன்லால்.
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் செங்கனூர் பகுதியில் நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மும்பை படப்பிடிப்பிலிருந்து கிளம்பி வந்து கலந்து கொண்டுள்ளார் மோகன்லால். ஆச்சரியமாக இந்த நிகழ்வில் கேரள திரைப்பட மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் கலந்து கொண்டதோடு, மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டியும் எடுத்திருக்கிறார். ஒரு அமைச்சர் ஒரு நடிகரை பேட்டி எடுப்பது என்பது சினிமா வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும்.
இந்த பேட்டி எடுத்தது குறித்து அமைச்சர் ஷாஜி செரியன் கூறும்போது, “மும்பை படப்பிடிப்பில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே கிளம்பி வந்தார் மோகன்லால். அவர் வந்ததால் இந்த நிகழ்ச்சியே களைகட்டியது. அனைவரும் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் என்னுடைய ஒவ்வொரு கேள்விக்கும் அழகாக நிதானமாக பதில் அளித்தார். என் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பரான ஒருவரை பற்றி கேட்ட சில ட்ரிக்கான கேள்விகளுக்கு கூட புத்திசாலித்தனமாக, எச்சரிக்கையாக பதில் அளித்தார்” என்று கூறியுள்ளார்.