100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் |

பாலிவுட்டின் பிரபல நடிகையான தீபிகா படுகோனே தான் தாய்மை அடைந்திருப்பதாக கணவர் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அறிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளின் ஆடைகளைப் பகிர்ந்து 'செப்டம்பர் 2024' என்று குறிப்பிட்டு தீபிகா, ரன்வீர் எனப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதற்குள் லைக் செய்துள்ளனர். சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
இந்திய அணியின் பாட்மின்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே. கொங்கணியைத் தாய் மொழியாகக் கொண்ட தீபிகா டென்மார்க்கில் பிறந்து பெங்களூருவில் படித்து வளர்ந்தவர். சோப் விளம்பரப் படத்தில் நடித்து பிரபலமடைந்த தீபிகா பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
முதலில் கன்னடப் படத்தில் அறிமுகமாகி பின் 2007ம் ஆண்டு 'ஓம் சாந்தி ஓம்' ஹிந்திப் படத்தில் நடித்து பிரபலமாகி பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தாய்மை அடைந்துள்ளார்.