மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி |

தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். அதன் பிறகு ஜெய்யுடன் இணைந்து தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்கிற படத்திலும் நடித்தார். தொடர்ந்து ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர் கடந்த 2021ல் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நிலவிய சமயத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென பாலிவுட் தயாரிப்பாளரான ஆதித்யா தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு, ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை தந்தார்.
இந்த நிலையில் தற்போது யாமி கவுதம் கர்ப்பமாகி உள்ளார். தற்போது அவர் ஆர்ட்டிக்கிள் 370 என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய யாமி கவுதமின் கணவரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ஆதித்யா தர், தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
இதுபற்றி யாமி கவுதம் கூறும்போது, “கர்ப்பமாக இருக்கும் சமயத்திலே படத்தில் நடித்த அனுபவம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்.. அந்த அளவிற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.