ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், ஷாரூக்கான், டாப்சி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளிவந்த படம் 'டங்கி'. கடந்த 20 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 444 கோடி வசூலைப் பெற்றதாக தயாரிப்பு நிறுவனமே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஷாரூக் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த 'பதான், ஜவான்' ஆகிய இரண்டு படங்களுமே ஆக்ஷன் படங்களாக அமைந்து தலா ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. ஆனால், 'டங்கி' படம் உணர்வுபூர்வமான கதையுடன் கொஞ்சம் நகைச்சுவை கலந்த படமாக இருந்தது. மற்ற இரண்டு படங்களைப் போல ரசிகர்களிடத்திலும், விமர்சகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெறத் தவறியது. சுமாரான படம் என்றே பலரும் கூறியிருந்தார்கள்.
இருந்தாலும் 'சலார்' போன்ற ஆக்ஷன் படங்கள் வந்ததாலும் அதையும் சமாளித்து இப்படம் 444 கோடி வசூலித்துள்ளதை பாலிவுட் ஆச்சரியத்துடன் பார்க்கிறது. மொத்தமாக கடந்த வருடத்தில் மட்டும் 2200 கோடி வசூலைத் தனித்து பெற்ற நடிகராக ஷாரூக் சாதனை புரிந்துள்ளார். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 'டங்கி' படம் தியேட்டர் வசூலில் லாபத்தையும், ஓடிடி, சாட்டிலைட் இதர உரிமைகளில் கிடைத்த வருவாயிலும் மிகவும் லாபரகமான படமாக அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஒரே ஆண்டில் மூன்று வெற்றி, வசூல், லாபம் என்ற சாதனையை ஷாரூக்கானே மீண்டும் செய்வது சந்தேகம் என்பதுதான் பாலிவுட்டினரின் கருத்தாக உள்ளது.




