குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
2023ம் ஆண்டு முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இந்த வாரம் வெளியான இரண்டு முக்கிய படங்களாக ஹிந்தியில் தயாரான 'டங்கி', தெலுங்கில் தயாரான 'சலார்' ஆகிய படங்கள் இருந்தன. 'டங்கி' படம் ஹிந்தியில் மட்டுமே வெளியானது. ஆனால், 'சலார்' படம் தெலுங்கில் தயாராகி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகியும் பான் இந்தியா படமாக வெளியானது.
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்தப் படங்கள் ரசிகர்களின் முழு வரவேற்பைப் பெறவில்லை என்பதே உண்மை. 'டங்கி' படம் ஒரு அழுத்தமான கதையாக இருந்தாலும் அதை சுவாரசியமாகச் சொல்லவில்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஷாரூக் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு அதிரடிப் படங்களாக அமைந்த 'பதான், ஜவான்' ஆகிய படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்தன. ஆனால், இந்த 'டங்கி' ஆக்ஷன் படமாக இல்லாமல் முழுமையான சென்டிமென்ட் படமாக அமைந்தது. ராஜ்குமார் ஹிரானியின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான 'முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு' ஆகிய படங்களைப் போல இந்த 'டங்கி' படம் அழுத்தமாக அமையவில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது.
'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் கன்னடத் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குனர் பிரசாந்த் நீல். அவரும் பிரபாஸும் இணையும் படம் என்பதால் 'சலார்' படத்தின் மீது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அழுத்தமான கதை இல்லாததாலும், 'கேஜிஎப்' படத்தின் சாயல் அதிகமாக இருப்பதாலும் தெலுங்கைத் தவிர இப்படத்திற்கு மற்ற மொழிகளில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் முதல் நாள் வசூலாக புதிய சாதனை படைக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
ஷாரூக்கின் இந்த வருடத்திய இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்குப் பிறகு 'டங்கி' படமும், பிரபாஸ் நீலின் 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு 'சலார்' படமும் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் கள நிலவரம்.