மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் |
சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான 'டைகர் 3' நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் டைகரான சல்மான்கானின் வில்லனாக நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி. படம் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர் வில்லனாக நடிக்கும்போது அதிக சுதந்திரம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: டைகர்-3 படத்திற்கு கிடைத்த வரவேற்பையும், எனது நடிப்பின் மீது மக்கள் எந்த அளவிற்கு அன்பைப் பொழிந்திருக்கிறார்கள் என்பதையும் கண்டு நான் சிலிர்த்துப் போயிருக்கிறேன். நாங்கள் ஒரு நல்ல நோக்கத்தோடு படத்தை தொடங்கினோம். படம் உலகளவில் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆன்டி-ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை நான் மிகவும் ரசித்தேன், மேலும் நம் நாட்டின் மிகப்பெரிய அதிரடி சூப்பர் ஸ்டாரான சல்மான் கானுடன் நேருக்கு நேர் மோதுவதை விட வேறேது சிறந்ததாக இருக்கும். எங்கள் மோதலை மக்கள் ரசித்து மகிழ்ந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அது எனக்கு சிறந்த மதிப்பீடாகும்.
நான் எப்போதுமே தேர்வு செய்யும் திரைப்படங்களின் மூலம் மக்களை மகிழ்விக்க விரும்புவேன். எதிர்மறையான கதாபாத்திரத்திம் நான் இதுவரை முயற்சி செய்யாத விஷயங்களை முயற்சிக்க சுதந்திரம் அளித்தது. எனது வில்லத்தனமான திருப்புமுனை கதாபாத்திரத்திரத்தை ரசித்ததற்காகவும், டைகர் 3 படத்தை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக மாற்றியதற்காகவும் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.