இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

அட்லி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் நாளை மறுதினம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள ஹிந்திப் படம் 'ஜவான்'. இப்படம் தமிழ், தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் இந்தியாவில் மட்டும் ஆன்லைனில் 3 லட்சம் முன்பதிவை நெருங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு ஆன்லைனில் அதிகமான முன்பதிவு செய்யப்பட்ட படங்களில் ஷாரூக்கான் நடித்த 'பதான்' படம் 5.6 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளுடன் முதலிடத்திலும், 'கேஜிஎப் 2' படம் 5 லட்சம் முன்பதிவுகளுடன் இரண்டாமிடத்திலும், 'பிரம்மாஸ்திரா' படம் 3 லட்சம் முன்பதிவுகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளது. இன்றிரவுக்குள் 'பிரம்மாஸ்திரா' முன்பதிவு 'ஜவான்' முந்திச் சென்றுவிடுமாம்.
தன்னுடைய 'பதான்' படத்தின் முன்பதிவை 'ஜவான்' மூலம் ஷாரூக்கான் முறியடிக்க வாய்ப்பில்லை என்றாலும் 4 லட்சம் முன்பதிவுகளையாவது பெறுவாரா என பாலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.