'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தொடர் வெற்றி படங்களை இயக்கிய அட்லி இயக்கத்தில் அடுத்து ஷாரூக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தை ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இதிலிருந்து வெளிவந்த டிரைலர், பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு வட இந்திய ரசிகர்களை கவரவில்லை.
இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் நீளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதன் முதல் பாதி 1 மணி நேரம் 21 நிமிடங்கள் மற்றும் இரண்டாம் பாதி 1 மணி நேரம் 25 நிமிடங்கள் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட மொத்த படமும் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் கொண்டதாக கூறப்படுகிறது. எப்போதும் போல் அட்லி இயக்கும் படங்கள் கிட்டத்தட்ட 3 மணி நேர படமாக இருக்கும். இதில் ஜவான் மட்டும் விதிவிலக்கு இல்லை என இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.