என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குனர் பால்கி, ‛‛சீனிகம், பா, இங்கிலீஸ் விங்கிலீஸ், ஷமிதாப், சூப் : ரிவேன்ஜ் தி ஆர்டிஸ்ட்'' உள்ளிட்ட படங்களின் மூலம் புகழ்பெற்றார். தற்போது அவர் இயக்கியுள்ள படம் 'கூமர்'. இதில் அபிஷேக் பச்சன், சயாமி கவுர், சபனா ஆஸ்மி, அன்கத் பேடி உள்பட பலர் நடித்துள்ளனர். அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.
கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் சயாமி கெர் விபத்தில் கையை இழக்கிறார். மீண்டும் தன்னை வலியிலிருந்து விடுவித்து ஒற்றை கையுடன் போராடி பெண்கள் கிரிக்கெட் டீமின் சிறந்த பவுலராக எப்படி பரிணமிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில் கிரிக்கெட் பயிற்சியாளராக அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார். கிரிக்கெட் டீமின் உரிமையாளராக அமிதாப்பச்சன் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.