'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
அமெரிக்க இந்தியரை ஒருவரை நடிகை அசின் காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய அசின், இந்தி கஜினி மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார். அமீர்கான், சல்மான்கான் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்தார். இந்தியில் இவர் நடித்த 6 படங்களில் 4 படங்கள் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்தது. இதனால் தென்னிந்திய சினிமாவையே மறந்த அசின் முழுநேர பாலிவுட் நடிகையானார்.
இந்நிலையில் சமீபகாலமாக நடிகை அசின் இந்தியிலும் சரி, வேறு எந்த மொழி படங்களிலும் சரி நடிப்பதற்கு கமிட் ஆகவில்லை. மேலும் அவர் அடிக்கடி அமெரிக்காவும் சென்று வருகிறார். இதுப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்ததில், நடிகை அசின் அமெரிக்க இந்தியரை ஒருவரை காதலிப்பதாகவும், அதற்காகத்தான் அவர் அடிக்கடி அமெரிக்கா சென்று வருவதாகவும், இதனால் தான் புதிய படங்களின் வாய்ப்பை தவிர்ப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள். மேலும் கடைசியாக தமிழில் ஒரு பெரிய படத்தில் நடித்து முடித்து விட்டு, அப்படியே அவரை திருமணமும் செய்ய அசின் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.